( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்றுச் சிறப்புமிக்க  கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் (ருஹுணு மகா கதிர்காமம்) ஆடிவேல் விழா எசல திருவிழாவிற்கான கன்னிக்கால் அல்லது பந்தல்கால் நடும் நிகழ்வு இன்று (24) வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சுப முகூர்த்தத்துடன் இடம்பெற்றது.

இவ்வாறு 45 நாட்கள் கப்சித்துவாவின் பின்னர், அதாவது எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் முதல் பெரஹெரா திருவிழா ஆரம்பமாகவுள்ளது.

16 நாட்கள் நடைபெறும் இந்த ஊர்வலம் ஜுலை 21ஆம் திகதி இரவு இடம்பெற்று ஜுலை 22ஆம் திகதி மாணிக்ககங்கையில் நீர் வெட்டு திருவிழாவுடன் நிறைவுபெறும் என ருஹுனு மகா கதிர்காமம் ஆலய பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர தெரிவித்தார். .


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours