40 வருடங்கள் கல்விச் சேவையாற்றிய
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் எம் எம்.அமீர் தனது 60 வது வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.
ஆரவாரமின்றி ஓய்வு நிலைக்கு சென்ற மருதமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.எம்.அமீர்
1964
மார்ச் மாதம் 23 அன்று பிறந்தவர் .சிவத்த மரைக்கார் முகம்மது
அமீர்,இயல்பிலேயே சாந்தமான குணம் கொண்டவர். பேசுவதற்கும்,பழகுவதற்கும்
இனிமையானவர்.1984ல் அமீர் பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெற்றார்.பொருளியல்
பாடத்தை மாணவர்கள் விரும்பி கற்க இவரிடம் செல்வதுண்டு.
இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சையில்கூடிய புள்ளிகளைப் பெற்று தன்னை ஓர் கல்வி அதிகாரியாக தரமுயர்த்திக் கொண்டார்.
ஆசிரியராக
திட்டமிடல்மற்றும்மீளாய்வுபிரதி க்கல்விப்பணிப்பாளராக
அதிபராக கல்வித் துறையில் தன்னை அர்பணித்த அவர் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளரானார்.
பின்னர் மட்டக்களப்புமத்திகல்விவலயத்தி ன் வலயக்
கல்விப் பணிப்பாளராக இறுதி இரு வருடங்கள் இருந்து ஓய்வுபெற்றார்.
தன் சேவைக் காலத்தில் தன்னடக்கத்துடன் மிக மென்மையாக நடந்து கொண்ட கல்வியதிகாரிகளுள் அமீரும் ஒருவராவார்.
Post A Comment:
0 comments so far,add yours