(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை
'ஸஹ்ரியன் 90' அணியினருக்கும் ஸஹ்ரியன் பவர் பிளேயர் 96 அணியினருக்கும்
இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை
மைதானத்தில் (25) நடைபெற்றது.
15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் ஸஹ்ரியன் பவர் பிளேயர் 96 அணியினர் வெற்றியீட்டி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
இப்
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய பவர் பிளயர் 96 அணியின்
தலைவர் நஸீர்கான் தனது அணியை துடுப்பெடுத்தாட பணித்தார். இதனடிப்படையில்
நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து
126 ஓட்டங்களை பவர் பிளயர் 96 அணி பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில்
ஏ.எம்.நஸ்வி 30 பந்துகளுக்கு ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும், தாரிக்
சக்காப் 25 பந்துகளுக்கு 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் சனுஸ் காரியப்பர், சதாக்கத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
127 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய 'ஸஹ்ரியன்ஸ் 90' அணியினர்
15 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து
88 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவினர்.
'சஹிரியன்ஸ் 90' அணிசார்பாக அதிகூடிய ஓட்டமாக பாரிஸ் 24 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்றார்.
பந்து
வீச்சில் பவர் பிளேயர் 96 அணி சார்பாக பைசால் 2 விக்கட்டுக்களையும்
அஜ்மல், தாரிக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
மேலதிக 39 ஓட்டங்களால் 'பவர் பிளயர் 96' அணியினர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours