( வி.ரி.சகாதேவராஜா)
பிகாஸ்
கெம்பஸ் (BCAS campus)இன் கல்விச் சாதனைக்கான பட்டமளிப்பு விழாவானது கடந்த
திங்களன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை மாலை
நிகழ்வுகளாக நடைபெற்றது.
பட்டமளிப்பு
விழாவில் மொத்தம் 424 இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் 622 Btec HND
பட்டதாரிகள் உள்ளடங்கலாக 1046 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
25
வருட கல்விச்சேவையுடைய விகாஸ் கேம்பஸ் இன் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமே
கலந்து சிறப்பித்தனர்.
விகாஸ் கேம்பஸ் இன் துணை வேந்தர் பேராசிரியர் ருவான் அபேசேகர பிரதி பொதுமுகாமையாளர் சூரிய விபிலே
மாஸ்டர் கார்டு இலங்கையின் பணிப்பாளர் திருமதி மகேசா அமரசூரிய மற்றும் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
BCAS campus இதுவரை 20ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.மேலும் 35 பாடநெறிகள் 250 விரிவுரையாளர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது.
Post A Comment:
0 comments so far,add yours