( வி.ரி.சகாதேவராஜா)
மறைந்த முன்னாள் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர்
மௌலானாவிற்கான துஆப் பிரார்த்தனை மற்றும் இரங்கல் நிகழ்வு சம்மாந்துறை வலய
சபூர் வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் எம்பீஎம். ஸாபீர் தலைமையில்
நேற்று(28) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்எச்எம். ஜாபீர் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினார்.
மாணவர்கள் குர்ஆன் ஓதினர்.
கௌரவ அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
மேலும் விசேட அதிதிகளாக பலர்
கலந்து சிறப்பித்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours