( வி.ரி.சகாதேவராஜா)
 சம்மாந்துறை வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராகவிருந்து கடந்த 10 ஆம் தேதி மரணித்த மர்ஹூம் டாக்டர் உமர் மௌலானாவிற்கான
துஆப் பிரார்த்தனையும் இரங்கல் நிகழ்வும் இன்று (30) வியாழக்கிழமை சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனை ஏற்பாடு செய்த இப் பெருநிகழ்வு  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்எச்எம் .ஜாபீர் தலைமையில் நடைபெற்றது.

 இந்த நிகழ்வில் மறைந்த பணிப்பாளருக்கு குர்ஆன் ஓதி துவாப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. விசேட உரையை விரிவுரையாளர் அன்சார் மௌலானா நிகழ்த்தினார்.
பிரதிக் கல்விப் பணிப்பாளர் யாசீர் அரபாத் வரவேற்புரை வழங்க முழு நிகழ்வையும் சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றிய தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.

விசேடமாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாரின் இரங்கல் செய்தியும் அங்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நுஸ்ரத் நிலோபராவால் வாசிக்கப்பட்டது. வலய கணக்காளர் சீ.திருப்பிரகாசமும் கலந்து கொண்டார்.

 மேலும் கல்விப் பணிப்பாளர்கள், கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள்,
அதிபர்கள் இரங்கல் உரையாற்றினார்கள்.

மறைந்த மௌலானாவின் குடும்பம் சார்பில் அவரது சகோதரர் வாஜித் மௌலானா ஏற்புரை வழங்கினார். நிகழ்வின் செயலாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எச். நைரூஸ்கான் நன்றியுரையாற்றினார் .
நிகழ்வில் கல்விப் பணிப்பாளர்கள் கல்விசார் உத்தியோகத்தர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் அதிபர்கள் மறைந்த முன்னாள் பணிப்பாளரின் குடும்ப உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours