---
(எம்.என்.எம்.அப்ராஸ்)
கிழக்கிலங்கையின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழும், அக்கரைப்பற்றில் இயங்கி வரும் ஐ.பி.எச்.எஸ்(IPHS Campus)கல்வி நிறுவனத்தின் முதலாவது வருடாந்த பட்டமளிப்பு நிகழ்வானது, கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை (29) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பொறியியலாளர் என்.ரீ.ஹமீட் அலி தலைமையில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் உயர்டிப்ளோமா மற்றும் டிப்ளோமா ஆகிய பாடநெறிகளை பூர்த்தி செய்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் பிரதான அதிகாரியும்,கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், பிரான்ஸ் நாட்டிற்கான முன்னாள் தூதுவருமான பேராசிரியர் சானிக்கா ஹிம்புராகம அவர்களும், விசேட அதிதிகளாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி உமர் லெப்பை செய்னுடீன்,உம்மு தர்தா அரபிக் கல்லூரியின் அதிபர் கலாநிதி எம்.ஐ.சித்தீக் (அஸ்ஹரி), நிறுவனத்தின் முகாமையாளர்,நிர்வாக உத்தியோகத்தர்கள்,விரிவுரையாளர் கள் கல்வியியலாளர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இலங்கை மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டதும் மற்றும் பிரித்தானிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் இக்கல்வி நிறுவனமானது இப்பிராந்தியத்தில் உள்ள மாணவர்களின் வாழ்வை மேலோங்க செய்யும் வகையில்,உள்நாடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வகையிலும்,சர்வதேச தரத்திலான கல்வி திட்டங்களை இந்நிறுவனம் வடிவமைத்து சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் செயலாற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours