( வி.ரி.சகாதேவராஜா)
 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள நெல்லூர் கலைமகள் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களுடைய 60 மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வு  பாடசாலையின் அதிபர். பா. லோகேஸ்வரன் தலைமையில்  நேற்று முன்தினம் இடம்பெற்றது.

 "எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் தொனிப்பொருளில்  இணைந்த கரங்கள் அமைப்பானது  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பல கஸ்ர பிரதேசங்களில்  உள்ள பாடசாலை மாணவர்களுக்கு  உதவியினை வழங்கி  வருகின்றது.

மேலும் இந் நிகழ்வில் பாடசாலை இணைப்பாடவிதான இனணப்பாளர்  சி. கண்ணன், முன்பள்ளி பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர்  சு. கணேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 மேலும் ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன்  பாடசாலையின் அதிபர்  து. வித்தியானந்தன் அவர்களுடன் 
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான,
சி.காந்தன், சி.துலக்சன், சனாதானன் ஆகியோர் 
கலந்து கொண்டு 60 மாணவர்களுக்கான பாடசாலைக்கு செல்வதற்கான  கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours