(எம்.எம்.றம்ஸீன்)
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் உள நல பிரிவுக்கான சமூக சுகாதார மையத்தின் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் தலைமையில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி ஸகீலா இஸ்ஸதீன் ,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,கல்முனை பிராந்திய உள நல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே நெளபல்,மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.ஏ கபூர்,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உள நல வைத்தியர் டொக்டர் கசூன் கடுவெல,சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம் நெளபர்,வைத்தியர்கள் ,தாதி உத்தியோஸ்தர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours