( வி.ரி.சகாதேவ்ராஜா)


கிழக்கிலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற  மட்டக்களப்பு  மண்முனை தென்மேற்கு  தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப்பிள்ளையாருக்கான மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 03.06.2024ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

அதனை முன்னிட்டு எதிர்வரும் 30,31.05.2024ஆம் திகதிகளில் கிரியைகள் ஆரம்பமாகின்றன .

01,02.06.2024ஆம் திகதி ஆகிய இரு நாட்கள் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும் .

தொடர்ந்து மறுநாள் 03.06.2024ஆம் திகதி கும்பாபிசேகம் நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

குறித்த காலங்களில் விசேட பொதுப்போக்குவரத்துச் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அடியார்களுக்கு ஆலய அன்னதான சபையினரால் அன்னதான ஒழுங்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours