மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் க.பொ.த.சாதாரண தர மாணவர் தின நிகழ்வானது கல்லூரி அதிபர் எம்.எம்.ஹிர்பஹான் தலைமையிலும்,பிரதி அதிபர்களான எம்.பி.ஏ.ராஜி, ஏ.ஆர்.என்.மன்பூஸா , தரம் 10,11 க்கு பொறுப்பாகயிருக்கும் உதவி அதிபர் எம்.ஐ.சர்மலா , வலய அதிபர் ஈ.கமால்தீன், பகுதித் தலைவர் ஏ.எஸ்.எம்.முஜீப் , தரம் 10,11இல் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது
இதன்போது பிரதம அதிதியாக அப்துல் அஸீஸ் ஸன்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் அப்துல் அஸீஸ் அப்துல் கபீல் கலந்து சிறப்பித்தார்.
அத்தோடு கெளரவ அதிதிகளான அல் ஹிக்மா ஜூனியர் பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம்.மஹ்ரூப் , அல்-ஹம்றா பாடசாலையின் அதிபர் எம்.எம்.நியாஸ் ஆகியோரும், விஷேட அதிதிகளான அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் பீ.எம்.எம்.அரபாத் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் ,உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours