(வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை ஸ்ரீ கோரக்க பிள்ளையார், ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலயங்களுக்கான  ஒலிபெருக்கி மற்றும் துணைசாதனங்களுக்கான உதவி லண்டனில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

ஆலய பொருளாளர் கிருஷ்ணபிள்ளை சசிகரன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான இச் சாதனங்களை
லண்டனில் வசிக்கும் *பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளை* அமைப்பின்  ஸ்தாபகர்  திரு பத்மநாதன் நடேசன்  வழங்கி வைத்தார்.

அவர்  அமரத்துவமடைந்த தனது  தாயாராகிய பத்மநாதன் மகேஸ்வரி  அவர்களின் 12ம் ஆண்டு சிரார்த்த தினத்தை  முன்னிட்டு
இவற்றை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வு
சம்மாந்துறை ஸ்ரீ கோரக்க பிள்ளையார்  ஆலயத்தில் நேற்று(29) புதன்கிழமை மாலை நடைபெற்றது.

ஒலிபெருக்கி மற்றும் துணைசாதனங்களை நடேசன் சார்பில் ரவிந்திரன் கபிலாசன்
உதயகுமார் ஸயிப்பிரசாந் ஆகியோர், சைவசமய ஆர்வலர் உதவிக் கல்விப் பணிப்பாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.
ரி.சகாதேவராஜா முன்னிலையில் வழங்கி வைத்தனர்.

ஆலயம் சார்பில் பிரதம குரு சிவ ஸ்ரீ சுவேந்திரன் குருக்கள் மற்றும் செயலாளர் த.அழகுதுரை பொருளாளர் கி.சசிகரன் ஆகியோர் அதனைக் கையேற்றனர்.

ஆலய பொருளாளர் கிருஷ்ணபிள்ளை சசிகரன் கூறுகையில்..
லண்டனில் வாழும் பரோபகாரி திரு.பத்மநாதன் நடேசன் எமது கிராமத்தின் கல்வி பொருளாதார சமூக ஆன்மீக துறைகளின் வளர்ச்சிக்கு பல லட்சம் ரூபாய்களை வழங்கி வருகிறார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் என்றார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours