( வி.ரி.சகாதேவராஜா)
தூய்மையான
அரசியலுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் அம்பாறை மாவட்ட மார்ச் 12
இயக்கத்துடன் பவ்ரல் இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த மக்கள் மேடை நிகழ்வு
இன்று (26) ஞாயிற்றுக்கிழமை காலை காரைதீவு பாபா ரோயல்ஸ் விருந்தினர்
விடுதியில் இடம்பெற்றது.
மார்ச்
12 இயக்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவர் கந்தையா சத்தியநாதன் தலைமையில்
இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி
மற்றும் பொது சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மார்ச் 12 இயக்கத்தின் தோற்றம் செயற்பாடு தொடர்பாக காணொளி காண்பிக்க பட்டது.
அம்பாறை மாவட்ட தரவுகள் தொடர்பாக பவ்ரல் இயக்கத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் இஷத் இன்காம் உரையாற்றினார்.
நிகழ்ச்சிதொடர்பாக சொர்ணலிங்கம் சந்திரசிறி ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்தினரகள்.
இதன்போது
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ச, காரைதீவு
முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மாகாண சபை உறுப்பினர் கட்சி
பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துரைத்தனர்.
மார்ச் 12 இயக்கத்தின் மாவட்ட பிரதிநிதி வி.ரி.சகாதேவராஜா நிகழ்வை நெறிப்படுத்தி தொகுத்து வழங்கினார்.
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தும் மாவட்டத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
அவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
இதன்போது
அம்பாறை மாவட்ட சிங்கள தமிழ் பேசும் பிரதேசம் எதிர்நோக்கும் பல்வேறு
பிரச்சனைகள் சவால்கள் குறித்து பிரதிநிதிகள் பேசினார்கள் .மக்களும்
பேசினார்கள்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் எரியும் பிரச்சனையான கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் அங்கு காரசாரமாக பேசப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours