மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி. மதிவதனி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.


புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் ஓந்தச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் நிதி உதவியுடன் குறித்த கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஆஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்த பழைய மாணவரான ரீ. சௌந்தரராஜன், பட்டிருப்பு கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் பு. திவிதரன், சம்மாந்துறை கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா, மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பெற்றோர்கள், நலம்பிரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது 450 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்களைக் கலந்து கொண்ட அதிதிகள் அதிபர்,ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்......பழுகாமம் நிருபர் 





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours