(எம்.எம்.ஜெஸ்மின்)
வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் , மாகாணத்தில் வசிக்கும் பல்கலைக்கழக கல்விமாணி பட்டதாரிகள் உடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
வடமேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில், கொழும்புப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகங்களில் கல்விமாணிப் பட்டப் படிப்பை நிறைவுசெய்துள்ள 24 பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழகத்தில் கல்விமாணிப் பட்டம் பெற்றுள்ள தங்களுக்கு அரசாங்கத்தின் பட்டதாரி நியமனங்களின்போது இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அதன்போது அவர்கள் ஆளுனரிடம் தங்கள் தரப்பு முறைப்பாடுகளை முன்வைத்தனர்
Post A Comment:
0 comments so far,add yours