(எம்.எம்.றம்ஸீன்)
சம்மாந்துறை, மட்டக்களப்பு தரவை 01 கிராம சேவகர் பிரிவுக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கிளை புனரமைப்புக்கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், அரசியல் அதி உயர் பீட உறுப்பினரும் , முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான சட்டத்தரணி எம்.எம். சௌபீர், சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் அர்ஷத் இஸ்மாயில் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours