வரலாற்று
பிரசித்தி பெற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ
கொடியேற்றம் எதிர்வரும் 01ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
கொக்கட்டிச்சோலை
தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குருவும் தாந்தாமலை முருகன் ஆலயத்தின் பிரதம
குருவுமான மு.கு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் தலைமையிலே திருவிழா பூசை
வழிபாடுகள் நடைபெறவுள்ளது.
கொடியேற்றம்
ஆலய பரிபாலன சபை தலைவர் மு.அருணன் தலைமையிலே நடைபெற்று தொடர்ந்து 21
நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று இறுதியாக யூலை 22 ஆம் தேதி திங்கட்கிழமை
அதிகாலை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.
உற்சவ காலங்களில் கதாப்பிரசங்கம் கூட்டு வழிபாடு மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகி உள்ளன.
மேலும் பக்த அடியார்களுக்கு விசேட பஸ் போக்குவரத்து சேவைகள் தினமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தினமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆலய பரிபாலன சபை செயலாளர் செ. பரா( அதிபர்) தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours