இ.சுதாகரன்
மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றதுமட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள்,மதத்தலைவர்கள்,அரசியல்வாதிகள்,பொதுமக்கள்,பொது அமைப்புகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours