சா.நடனசபேசன்
கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர் க..அழகரெட்ணம் தனது 34 வருட தாதியர் சேவையில் அண்மையில் ஓய்வுபெற்றுள்ளார்
துறைநீலாவணையினைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கணபதிப்பிள்ளை பூபதி தம்பதியினரின் புதல்வர் என்பதுடன் தனது ஆரம்பக்கல்வியினை துறைநீலாவணை மெ.மி.த.க பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியினை துறைநீலாவணை மகாவித்தியாலயம் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையிலும் உயர்தரத்தினை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலும் கற்று 1987.1015 இல் தாதியர் பயிற்சிப்பாடசாலைக்குத் தெரிவுசெய்யப்பட்டு 1991.04.05 இல் முதல் நியமனத்தினை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையிலும் மற்றும் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் தாதி உத்தியோகத்தராகக் கடமையாற்றிய நிலையில் தனது 60 ஆவது வயதில் ஓய்வுபெற்றுள்ளார்
இவர் ஒரு கலைப்பட்டதாரியாக இருப்பதுடன் மனித உரிமை டிப்ளோமா உட்பட பல பட்டங்களையும் நிறைவுசெய்துள்ளார். அதேவேளை துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தின் தலைவராகவும் துறைநீலாவணைக் கிராமத்தில் பல்வேறுபட்ட சமூக மட்ட அமைப்புக்களில் இருந்து சேவையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours