.
மட்டக்களப்பு
வலய முறைசாராக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் முருகு. தயானந்தன் 39
வருட அரச சேவையில் இருந்து இன்று (30) வியாழக்கிழமை ஓய்வு பெற்றார்.
1985ல்
புத்தளம் மாவட்டத்தில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்று கல்விப்பணியை
ஆரம்பித்த .தயானந்தன் 2001ல் இருந்து மட்டக்களப்பு தேசிய கல்வியியல்
கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.அதன் பின்னர் 2015 தொடக்கம்
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் முறைசாரா கல்வி பிரிவின் உதவிக்
கல்விப் பணிப்பாளராக சிறந்த பணியை திருப்திகரமாக நிறைவு செய்து நேற்று
பிரியாவிடை பெறுகின்றார்.
ஆசிரியர்
பயிற்சியை மட்டக்களப்பிலும்,தொழில்நுட்ப துறையில் இளமானி பட்டப்டிப்பை
இந்தியாவிலும் நிறைவு செய்தவர்.அமெரிக்கா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில்
சமூக அபிவித்திக்கான குறுங்கால தலைமைத்துவ பயிற்சி நெறியை பூர்த்தி
செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை
தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாக செயலாளராக நீண்ட காலம் வினைத்திறனுடன்
செயற்பட்ட செழுமைமிக்க தொழில் சங்கவாதியாக கல்விப்புலத்தில் தடம்பதித்தவர்.
தொடர்ந்து
கனிஷ்ட உறுப்பினர்களுக்கு தலைமைத்துவத்துக்கான சந்தர்ப்பங்களை வழங்கி
இன்றும் அங்கத்தவராக இருக்கின்றார்.இயற்கையாகவே சமூக மேம்பாடுசார் சிந்தனை
கொண்டவர்.
விசேடமாக மாற்றுத்திறனாகளின் வாழ்வில்
வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்பவாராக இருக்கிற ஒருவர் இவருடைய
இயற்கையான வேட்கை[Passion]அது என்பதால் முறைசாரா கல்வி துறைக்கான இலக்கு
குழுவிற்கு கனதியான சேவையை திரு.தயானந்தனால் வழங்க கூடியதாக இருந்தது
என்பதை ஒரு உத்தியோகத்தராக கூட இருந்து என்னால் உணரமுடிந்தது.
இற்றைக்கு
32 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தரிசனம் விழிப்புலனற்றோர் நலன்புரி
நிறுவனத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒரு தற்போது அதன் உபதலைவராக உன்னத
சேவை செய்கின்றார்.தமிழ் இலக்கிய பரப்பில் நல்ல வாசகனாகவும்,வினைத்திறனுடைய
விமர்சகராகவும் அடையாளம் காணப்பட்ட
வர் மட்டக்களப்பு
வாசகர் வட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராக இருந்து காத்திரமான
எழுத்துருவாக்கங்கள் கிழக்கில் தோன்ற பக்கபலமாக செயற்பட்டவர்.
இவரது
ஆளிடைத்தொடர்பாடல் நுண்ணறிவின் [ interpersonal IQ] கனதியை பாராட்டாமல்
இருக்க முடியாது இதை அனுபவித்த நண்பர்கள்,சகபாடிகள் அதிகம் இருப்பீர்கள் என
நம்புகிறேன்.இவரது Communication Style தனித்துவமானது, வியக்கதக்கது
Post A Comment:
0 comments so far,add yours