( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை
ஆதார வைத்தியசாலைக்கு 40 லட்சம் ரூபாய் பெறுமதியான உயிர் காப்பு
இயந்திரங்கள் நேற்று (21) வெள்ளிக்கிழமை நன்கொடையாக அன்பளிப்பு
செய்யப்பட்டது.
நுகேகொடயைச் சேர்ந்த
திருமதி.
குணசேகர இந்த உபகரணங்களை அன்பளிப்பு செய்திருந்தார். அவருக்கேற்பட்ட அனுபவமே இத்தகைய உதவி செய்யக் காரணமாக இருந்தது.
அவருடைய
பிள்ளைப் பிறப்பின் போது இத்தகைய உயிர் காப்பு இயந்திரம் இல்லாமையினால்
ஏற்பட்ட ஆபத்தை ஏனையோர் உணரக்கூடாது என்பதற்காக டாக்டர் திருமதி
சிறிநீதனூடாக இதனை கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கி வைத்தார்.
இந்த
நன்கொடையில் 3 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன சிசு இன்குபேட்டரும், 1
மில்லியன் ரூபா பெறுமதியான உயர் பாயும் ஆக்ஸிஜன் இயந்திரமும் உள்ளடங்கும்.
இந்த
முக்கியமான உபகரணங்களை. கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர்
ஏ.பி.ஆர்.எஸ். சந்திரசேனவிடம் நன்கொடையாளிகள் நேற்று வழங்கி வைத்தனர்.
அச்சமயம் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.இராஜேந்திரனும்
சமூகமளித்திருந்தார்.
திருமதி
எம்.எஸ். குணசேகர மற்றும் அவரது குடும்பத்தினரின் நம்பமுடியாத பரிசு இது.
மிகவும் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு - புதிதாகப் பிறந்த
குழந்தைகளுக்கு நாங்கள் வழங்கும் கவனிப்பில் ஆழமான தாக்கத்தை இது
ஏற்படுத்தும் என நம்புகிறேன் என்று பணிப்பாளர் டாக்டர் சந்திரசேன
நன்றியுடன் தெரிவித்தார்.
திருமதி எம்.எஸ்
Post A Comment:
0 comments so far,add yours