( வி.ரி.சகாதேவராஜா)
கதிர்காமக் காட்டுப்பாதை திறப்பு தினக் குழப்பத்தை தீர்த்து வைக்குமாறு 
 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரிடம் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சமய ஆர்வலருமான கி.ஜெயசிறில்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 காட்டுப்பாதை திறப்பு தொடர்பாக இரண்டு தினங்கள் ஏலவே அறிவிக்கப்பட்டு தற்பொழுது இறுதியாக யூலை இரண்டாம் தேதி என கதிர்காமத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது .

இது வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து செல்கின்ற பாதுகாத்திரீகர்ளுக்கு அறவே பொருந்தாது. 4 நாட்களுக்குள் கொடி ஏற்றத்துக்கு செல்ல முடியாது .மற்றும் பாதை திறந்து வைக்கப்படுகின்ற காலஅவகாசமும் போதாமல் இருக்கின்றது . இப் பாரம்பரிய புனித யாத்திரையை முடக்க திட்டமிடப்படுகிறதோ என் எண்ணத் தோன்றுகின்றது.

எனவே இந்த பாதயாத்திரை பாரம்பரியமாக நிலைத்து பேணும் வகையிலே முறையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்

 அது மாத்திரமல்ல இந்த பாதயாத்திரையை  வர்த்தமானி பிரகடனம் அறிவித்தல் செய்யப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours