(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அண்மையில் நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட சர்வமத தலைவர்களான வன. கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவஸ்ரீ  கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் அல்-ஹாபிழ் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அருட்தந்தை கலாநிதி நிஷான் குரே பாதர் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது இனங்களுக்கிடையில் சகவாழ்வு இன,மத நல்லிணக்கத்தை மேற்கொள்ளவதில் 20 வருடங்களுக்கும் மேலாக அக்கறையுடனும், முன்மாதிரியுடனும் செயலாற்றி வரும் சர்வமத தலைவர்களுக்கு இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அத்துடன் சர்வமத தலைவர்களுக்குப் புதிதாகக் கிடைத்த இப்பதவியினுடாக இலங்கையில் வாழக்கூடிய மூவின சமூக மக்களுக்கிடையில் இன,மத நல்லிணக்கம் சகவாழ்வை  பலப்படுத்த இப்பதவி நல்லதோர் சந்தர்ப்பமாக உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன,மத நல்லிணக்கத்திற்கான எதிர்கால வேலைத்திட்டங்களை சிறப்புடன் முன்னெடுத்துச் செல்ல சர்வமத தலைவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மனமகிழ்வுடன் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் மேலும் தெரிவித்துக்கொண்டார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours