பட்டிருப்புக் கல்வி வலயத்தின் ம.மு. தெ. எ பற்று. கோட்ட மட்ட தமிழ்த் தினப் போட்டியானது . குருமண்வெளி சிவசக்தி மகா வித்யாலயத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமாகிய பு.திவிதரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது
இவ்விழாவின் போது பிரதம அதிதியாக . பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் பி. புவனேந்திரன் கெளரவ அதிதியாக வலயக் கல்வி பணிமனையின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி தனுசியா ராஜசேகரம், விசேட அதிதிகளாகப் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிமனையின் திட்டமிடலுக்கு பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளர் இ ஜீவானந்தராஜா, கல்வி முகாமைத்துவத்துக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் தட்சனாமூர்த்தி ,பட்டிருப்பு கல்வி வலயத்தின் கணக்காளர் திருமதி சு சிவகுமார் ,பிரதிக் கல்விப் பணிப்பாளர் யு எல் எம் சாஜித் ,உதவி கல்வி பணிப்பாளர் போரதீவுக்கோட்ட கல்விப் பணிப்பாளர் த த. அருள்ராஜா மற்றும் வலயத்தில் உள்ள ஆசிரிய ஆலோசகர்கள் ,வளவாளர்கள், இணைப்பாளர்கள், ஆசிரியர்கள் ,பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், ஆலயங்களின் தலைவர்கள் ,விளையாட்டு கழக உறுப்பினர்கள், சங்கம் சபைகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வின் தலைவராகிய பு.திவிதரன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்)அவர்கள் தமது தலைமை உரையில் தமிழ் மொழி தினத்தின் முக்கியத்துவம் பற்றியும் இந்நிகழ்வை திறன்பட நடத்துவதற்கு அனைத்து நடுவர்களும் மற்றும் ஆசிரியர்களும் அதிபர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதுடன் இப்பாடசாலை அதிபர் மிகவும் சிறந்த முறையில் தமது பாடசாலை சமூகத்துடன் இணைந்து இந்நிகழ்வுக்கு பாடசாலையை ஒழுங்கு செய்து தந்தமைக்கு விசேடமாக நன்றி செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாகிய பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் பி.புவனேந்திரன் அவர்கள் தமது உரையின்போது இக்கோட்டமட்ட தமிழ் தின போட்டியானது நேர்த்தியாகவும் நடத்தப்படுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமையை முன்னிட்டு பாடசாலை அதிபருக்கும் கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்ததுடன் தமிழ்த் தினப் போட்டியின் முக்கியத்துவம் மற்றும் விபுலானந்தர் அவர்கள் ஆற்றிய பணிகளின் ஞாபகார்த்தமாக கொண்டாடப்படும் இந்நிகழ்வின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார்.
மற்றும் இந்நிகழ்வின் செயலாளராகிய அதிபர் சோ .செல்வம் அவர்கள் தனது நன்றியுரையின் போது இந்நிகழ்வினை நடத்துவதற்கு பல்வேறு முறையில் உதவி செய்த பாடசாலையின்பழைய மாணவர்கள் மற்றும் ஆலயங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், சங்கம் சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் ,அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மாணவர்கள், மற்றும் இந்நிகழ்வை நடத்துவதற்கு பண உதவிகள் சரீர உதவிகள் செய்து தமது ஒத்துழைப்பை வழங்கிய நலன் விரும்பிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக கூறினார்.
Post A Comment:
0 comments so far,add yours