உலகவாழ் முஸ்லிம்களின் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி - அனைத்து சவால்களையும் தியாக சிந்தையோடு எதிர்கொள்ளும் ஆற்றலை அல்லாஹ் வழங்க வேண்டுமென இன்றைய ஈதுழ் அழ்ஹா பெருநாள் தினத்தன்று பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இறை தூதர்களான நபி இப்ராஹிம் (அலை), நபி இஸ்மாயில் (அலை), அன்னை ஹாஜரா ஆகியோரின் தியாகத்தை பிரதிபலிக்கும் ஹஜ் கடமை என்பது தியாகத்தையும் சகிப்புதன்மையையும் அதிகம் வலியுறுத்தும் இறுதிக் கடமையாகும்.
இலங்கை முஸ்லிம்கள் - இந்த நாட்டிற்காக ஆற்றிய அனைத்து வகையான தியாகங்களும் போற்றுதலுக்குரியது.
தியாகத்தை வலியுறுத்தும் இந்நாளில் தியாகத்தையும் சகிப்புத் தன்மையையும் கடைப்பிடித்து இப் பெருநாளை கொண்டாடுவோம்.
நாம் வழங்கும் குர்பானிகளில் ஏழை மக்களை அதிகளவில் இணைத்துக் கொண்டு - அனைவரும் பெருநாள் தினத்தை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் கொண்டாடுவோம். எமது குர்பானிகளை இறைவன் அங்கீகரித்துக்கொள்ள பிரார்த்திப்போம்.
உலகவாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
ஈத் முபாறக்
Post A Comment:
0 comments so far,add yours