.
( வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை
ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி
டாக்டர் தர்மலிங்கம் பிரபாசங்கருக்கு அங்கு பணிபுரியும் தாதிய
உத்தியோகத்தர்கள் பெரு வரவேற்பளித்தனர்.
தாதியர்
சங்கப் பிரதிநிதிகளான எஸ்.சந்திரகுமார் எம்.அன்வர் ஏ.பரீஷ் ஏ றசூல்
உள்ளிட்ட தாதிய உத்தியோகத்தர்கள் புதிய வைத்திய அத்தியட்சகர் டாக்டர் பிரபா
சங்கருக்கு மாலை சூட்டி வரவேற்றார்கள்.
இந் நிகழ்வு நேற்று வைத்திய சாலையில் நடைபெற்றது.
அவர்களுடனான சந்திப்பும் இடம்பெற்றது. புதிய வைத்திய அத்தியட்சகர் குறைநிறைகள் தொடர்பாக தாதிய உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்தார்.
சம்மாந்துறை மண் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் இடம் பெற்றது.
ஏலவே வைத்தியசாலை அபிவிருத்திக் குழு அவரை வாழ்த்தி வரவேற்றது.
காரைதீவைச்
சேர்ந்த வைத்திய கலாநிதி டாக்டர் பிரபாசங்கர் முன்னதாக ஆரையம்பதி பிரதேச
சுகாதார வைத்திய. அதிகாரியாக கடமையாற்றி இருந்தார்.
இருவருட
வைத்திய நிருவாக துறை பட்டப்பின் பயிற்சி முடித்து வைத்திய அத்தியட்சகராக
தெரிவாகிய முதல் காரைதீவு வைத்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours