நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் இணைப்பு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கவேண்டும் என்றும் அத்தோடு அவர்களை ஏனைய திணைக்களங்களுக்குள் இடமாற்றக்கூடாது எனும் பல கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு கோட்டைக்கு முன்பாக பட்டதாரி ஒன்றியம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று  முன்னெடுத்திருக்கிறது. 

இவ் ஆர்ப்பாட்டம் மூன்றரை வருடங்களாக பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் தருவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு ஆசிரியர்களாகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் வேடமிட்டு  பல இன்னல்களுடன் அன்றாட தொழில்  வாழ்வை முன்னெடுத்துச் செல்லும் ஒட்டுமொத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் விடிவுக்காய் அரசை கண் திறந்து பார்க்க செய்வதற்கான ஒரு செயற்பாடாகவும் அமைந்துள்ளது. 

பாடசாலைகளில் ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் பட்டதாரிகள் நாட்டின் தலைநகரில் ஒரே நேரத்தில் கூடி தங்களது சார்பான நியாயங்களை முன்வைத்து இப் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் இதனால் அப் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்ப்பட்டிருந்தது. நாடளாவிய ரீதியில் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்ற நிலையில் அவர்களை ஆசிரியர் சேவைக்குள் கொண்டுவர கல்வி அமைச்சர் உள்ளிட்ட பலர் வாக்குறுதிகளுடன் கூடிய முன்னகர்வுகளை முன்னெடுத்தாலும் அது இன்றளவும் நிறைவேற்றப்படாததால் விரக்தியடைந்த பட்டதாரிகளே இன்று தலைநகரில் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

இவர்களது நியாயமான கோரிக்கைகளை உள்வாங்கி அவர்களை ஆசிரியர் சேவைக்குள் அரசு உள்ளீர்ப்பது தொழிலுரிமை சார்ந்தது






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours