( வி.ரி.சகாதேவராஜா)
 உகந்த மலை முருகன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவத்தையொட்டியும் கதிர்காமம் பாதயாத்திரையை ஒட்டியும் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உகந்தையில்  பாரிய சிரமதானமொன்றை நேற்று மேற்கோண்டனர்.


காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி ராகுல் நாயகி சஜிந்திரனின் வழிகாட்டலில் இவ் ஆண்டிற்கான உகந்தை முருகன் ஆலய சிரமதான நிகழ்வுகள் நிருவாக உத்தியோகத்தர்  த. கமலநாதன்  தலைமையில் இடம்பெற்றது.

             இதன்போது பாதயாத்திரை செல்பவர்களால் இயற்கை மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் முகமாக "பொலித்தீன் பாவனையை தடுத்தல் மற்றும் நீரினை கண்ணியமாக பயன்படுத்துதல் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகள் ஆங்காங்கே  பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் காட்சிப்படுத்தப்பட்டது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours