எஸ்.சபேசன்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேக நிகழ்வு   எதிர்வரும் 05.06.2024  புதன்கிழமை இடம்பெறவுள்ளது 

ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம்  எதிர்வரும் 05.06.2024  புதன்கிழமை இடம்பெறவுள்ளது ; ;இக்கும்பாபிஷேக நிகழ்வின் கர்மாரம்பம் 03.06.2024 இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது  பால்காப்பு நிகழ்வானது 04.06.2024 செவ்வாய்க்கிழமை இடம்பெற இருக்கின்றது. அதனைத்தொடர்நது 10 நாட்கள் மண்டலாபிஷேகப் பூசையினைத் தொடர்ந்து அம்மனுடைய திருக்கதவு 15.06.2024 சனிக்கிழமை திறக்கப்பட்டு உற்சவம் 7 தினங்கள் இடம்பெற உள்ளது இதில் தீமிதிப்பு வைபவம் 21.06.204 வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெறவுள்ளது.

 ஆலயத்தின் பூசைகளை சிவசிறி  கு.நல்லராஜா குருக்களின் தலைமையில் இடம்பெற இருப்பதுடன் உற்சவத்திற்கான ஒழுங்குகளை ஆலயத்தலைவர் க.அழகரெத்தினம் மற்றும் செயலாளர் எஸ்.குகதாசன் பொருளாளர் எஸ்.ரமேஸ் உட்பட நிருவாகசபையினர் ஆலய கும்பாபிஷேகம் மற்றும் உற்சவத்திற்கான ஏற்பாடுகளைச்செய்து வருகின்றனர்.























Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours