இ.சுதாகரன்
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி வியாழக்கிழமை(20) பிற்பகல் 3 மணியளவில் வித்தியாலயத்தின் முதல்வர் திரு.எஸ்.கோகுலராஜ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிமனையின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி தனுசியா ராஜசேகர் பிரதம அதிதியாகவும் ,ஆன்மீக அதிதிகள் ,விசேட அதிதிகள்,சிறப்பு அதிதிகள், அழைப்பு அதிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
போட்டியில் கங்கா இல்லம் முதலாம் இடத்தினையும் ,யமுனா இல்லம் இரண்டாம் இடத்தினையும், காவேரி இல்லம் மூன்றாம் இடத்தினையும் தனதாக்கிக் கொண்டதுடன் போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அதிதிகளினால் பதக்கம் அணிவித்து கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்கது
.
Post A Comment:
0 comments so far,add yours