(எஸ்.அஷ்ரப்கான்)
வெளியான
க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவத்துறையில்
அம்பாறை மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை
மாணவன் இஹ்ஸான் அஹமட்டை இன்று (01) வீடு தேடிச் சென்று, அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்
பதியுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்,
தொழிலதிபர் றிஸ்லி முஸ்தபா ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர். இங்கு
றிஸ்லி முஸ்தபா இஹ்ஸான் அஹமட்டுக்கு "டெப்" ஒன்றை பரிசளித்தார்.
இவர் மருத்துவத் துறைக்கு தெரிவாகியுள்ளதுடன்
அம்பாறை மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours