இ.சுதா


தமிழ்ப் பொதுவேட்டாளர் என்னும் விடயம் சிவில் சமூகம்,ஆன்மீகத் தலைவர்கள்,  கல்வியாளர்கள்,சமூக அரசியல் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக சமூகம், ஊடகவியலாளர்கள் மத்தியில் இருந்து தீர்மானிக்கப்பட்டது. அதனை மேலும் நகர்த்துவதற்காக 'மக்கள் சபை' என்னும் பொதுக்கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளன.எனத்தெரிவித்தார்.


மட்டக்களப்புப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள்சந்திப்பில் மேற்கண்டவாறு தரிவித்தார் 
அவர் மேலும் தெரிவிகும் போது
தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஒப்புதல் பெறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பொறுப்புள்ள தமிழர் தாய்க்கட்சி என்ற வகையில், தமிழரசுக் கட்சி தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.                                  

அந்த  முடிவு என்பது எமது கட்சியின் பொதுவான தமிழ் மக்கள் சார் முடிவாக இருக்க வேண்டும்.

அது ஒருவரது அல்லது தன் முனைப்பாகக் கருத்துகளைத் கொட்டும் ஒரு சாரார் சார்ந்த முடிவாக இருக்கக் கூடாது.                  

சிங்கள வேட்டாளர்களுக்கு வெற்றி பெறுவதற்கு தமிழரின் வாக்குகள் தேவைப்படலாம். அதற்காகக அவர்கள் வாக்குறுதிகள், உத்தரவாதங்களைத் தேர்தலுக்கு முன்பு தரலாம்.

அவர்கள் தரும் உத்தரவாதம் பொய்த்துப் போவதுதான் கடந்த காலப் படிப்பினைகளாகும்.          

இப்படிப்பினை போதியளவு இருந்தும் அதனைக் கருத்தில் கொள்ளாமல், சுயநலத்திற்காக செயற்பட்ட, செயற்படும் தமிழ் நபர்கள் உண்டு.அவர்கள் பொது வேட்பாளர் என்பதையும் வெறும் வழக்காடு மன்ற வழக்குப் பொருளாகவும் எடுக்கலாம்.அதில் தனிப்பட்ட இலாபத்தையும் ஈட்டலாம்.

இப்படியான தன்னலவாதிகள் தமிழரசுக் கட்சியின் வெளியில் அதிகம் காணப்பட்டாலும், யுத்தமொனிப்பின் பின்னர், கட்சிக்குள் இருந்தும் முளைக்கிறார்கள்.                

தமிழப் பொது வேட்பாளர் என்ற சிந்தனையை எண்ணக் கருவாக்கத்தில் இருந்தே சிதைக்க வேண்டும் என்று சிங்களத் தலைவர்கள் நினைப்பது புதுமையல்ல.
ஆனால்,தமிழர்களே, அதுவும் தமிழ்த் தேசியக்கட்சிக்குள் இருந்து பிரவாகம் எடுப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.      

சிங்கள வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக தமிழர் சிலருக்குச் சலுகைகள் அளிக்க முன்வந்தாலும் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க முன்வர மாட்டார்கள்.  
இது வரலாற்று உண்மையாகும்.

தற்போது தமிழ்ப் பொது வேட்டாளர் என்ற செயற்பாட்டினைத் தோற்கடிக்க சிங்களத் தலைவர்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,'பொதுத் தமிழ் வேட்பாளரைத் தோற்கடிப்பேன்' என்று யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆக்குரோசமாகவும், அருவருப்பாகவும் முழங்கியுள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால், அவர் வெற்றி பெற மாட்டார் என்பது தமிழர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

அப்படி என்றால், இந்த முழக்கதார் எதைத் தோற்கடிக்க நினைக்கிறார் என்பதுதுதான் ஆராயப்பட வேண்டியதாகும்.

அதாவது வடக்கு கிழக்கு மக்கள தமிழ்ப்பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலமாக தமது அபிலாசை பற்றிய மக்களாணையை வழங்க விரும்பலாம்.

அவை வடக்கு கிழக்கு இணைப்பு,கூட்டாட்சி, சுயாட்சி,தமிழரின் சுயநிருணய உரிமை,காணாமல் ஆக்கப்பட்ட தமிழரின் கோரிக்கையான சர்வதேச விசாரணை போன்றவற்றைத் தோற்கடிக்க தன்னலவாதியார் நினைத்கிறாரா? என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

தற்போது தேவை சிங்கள வேட்பாளர்களின் வெற்றியல்ல.தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கான மக்களாணையே வெற்றி பெற வேண்டும்.இதுதான தமிழரின் வெற்றியாகும்.

இந்த பொது வேட்டாளர் என்ற பேச்சு மூச்செடுக்கத்தொடங்கிய பின்னர் ரணில், சஜித்,அநுர ஆகியோர் வடக்கை நோக்கியும், தமிழரதக் கட்சியை நோக்கியும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

இந்த வருகை தனிப்பட்ட நபரின் பேச்சால் வந்தது அல்ல.பொது வேட்பாளர் என்ற அழுத்தத்தால் ஏற்பட்டதேயாகும்.

சிங்கள வேட்பாளரின் வெற்றிக்காகத் தமிழ்ப் பொது வேட்பாளரைத் தோற்கடிப்பேன் என்று முழங்குகுவது தமிழ் உறவுகளைப் பலப்படுத்தவா? இல்லை சிங்கள உறவுகளை மகிழ்ச்சிப்படுத்தவா? என்ற கேள்விக்குரிய விடையினை சாதாரண தமிழ்ச் சிறுவனே விளங்கிக் கொள்வான்.

இப்போது வேண்டியது தமிழர்களின் நலன்கள் ஒன்றுதானேயொழிய எவரதும் வர்க்க ரீதியான பயன்களோ சிங்கள பலன்களோ இல்லை.

தமிழரசுக் கட்சிக்கு  எதிராக வழக்குத் தாக்கல் செய்வது இலகுவானது. ஆனால்,தமிழர்களின் நலன்களை வழக்குத் தாக்கல் செய்தும் வெல்ல முடியாது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours