(வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை
கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் அதிபர் ஆசிரியர் மற்றும்
உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம் நேற்று (20) வியாழக்கிழமை
இடம்பெற்றது .
கல்முனை
ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சந்திரசேன திட்டமிடல் பிரிவு
பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் மற்றும் கல்முனை ஆதார
வைத்தியசாலையின் வைத்தியர்கள் ,தாதிய உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள்
உள்ளிட்ட குழுவினர்கள் மருத்துவ முகாமை நடாத்தினர்.
இதன்
போது பாடசாலையில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள் ,உத்தியோகத்தர்கள்
உள்ளிட்ட சுமார் 80 பேருக்கான தொற்றாநோய் நிலை பரிசோதனைகள் மற்றும்
பற்சுகாதார பரிசோதனைகள் செய்யப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours