(அஸ்லம் எஸ்.மெளலானா)
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையம் ஒழுங்கு செய்திருந்த சூழல் பாதுகாப்புக்கான மரநடுகை வேலைத்திட்டம் இன்று கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸியின் நெறிப்படுத்தலில் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரம்ஸீன் பக்கீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
அத்துடன் கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவு
பொறுப்பதிகாரி- பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ. வாஹித், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி- பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ. றபீக், கல்முனை மாநகர சபையின் உள்ளுராட்சி உத்தியோகத்தர் தாரிக் அலி சர்ஜுன், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் உட்பட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மாநகர சபை வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகள் பல நடப்பட்டன.
இதேபோல் கல்முனை பிரதேச செயலகத்திலும் கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டன என்று பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ. வாஹித் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours