(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச  ராஜபக்ஷவினால் சர்வமத தலைவர்களான வன. கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவஸ்ரீ  கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் அல்-ஹாபிழ் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அருட்தந்தை கலாநிதி நிஷான் குரே பாதர் ஆகியோர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக (07) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக்கடித்தை நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.

நாட்டின் தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை வலுப்படுத்தல். சகல இனங்களுக்கிடையில் சமாதானத்தினையும் சகவாழ்வினையும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றினை நோக்கி அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வ மத நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்படுத்தலுக்காக இவ்வமைச்சிற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள செயற்பணிகளை ஒருங்கிணைத்தல் இப்பதவியின் பிரதான இலக்கு மற்றும் செயற்பணிகளாகும் என்றும் நியமனக்கடிதத்தில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வமத தலைவர்களான வன. கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவஸ்ரீ  கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் அல்-ஹாபிழ் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அருட்தந்தை கலாநிதி நிஷான் குரே பாதர் ஆகியோர் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும்  இன ஒற்றுமைக்காக பல்வேறு செயற்பாடுகளை 20 வருடங்களுக்கு மேலாக முன்னெடுத்து வருகின்றவர்கள்.

இலங்கையில் இனங்களுக்கு இடையில் ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தங்களுடைய அனுபவரீதியான செயற்பாடுகளை கடந்த காலங்களில் நிரூபித்துக் காட்டியவர்கள்.

சர்வ மதக் கூட்டமைப்பின் முக்கியஸ்தவர்களாகவும் சிறந்த இன ஒற்றுமைக்கான முன்மாதிரி மிக்கவர்களாகவும் இந்த சர்வமதத் தலைவர்கள் செயற்பட்டு வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours