( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளுக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளிப் பதக்க விருதுகள்  கிடைக்கப் பெற்றுள்ளது.

ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கி கௌரவிக்கும் விழா இன்று (28) வெள்ளிக்கிழமை கொழும்பு வி எம் ஐ சி எச் மண்டபத்தில் நடைபெற்றது .

பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து சிறப்பித்தார்.

"பாதுகாக்கப்பட்ட புவியை பேணுவதற்கு  ஒன்றிணைவோமாக." என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட ஜனாதிபதி சுற்றாடல்  விருது வழங்கும் விழாவில் கல்முனை ஆதாரவைத்தியசாலை மற்றும் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலை ஆகிய இரு வைத்தியசாலைகளுக்கு வெள்ளி பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் மேற்படி இரண்டு வைத்தியசாலைகளுக்கும் மாத்திரமே இந்த வெள்ளி விருது கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது .

 சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை சார்பில் அதன் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் தர்மலிங்கம் பிரபாசங்கர் அந்த விருதினை பெற்றுக் கொண்டார் .

கல்முனை ஆதார வைத்தியசாலை சார்பில் அதன்  பணிப்பாளர் டாக்டர் ஏ.பி.ஆர்.எஸ். சந்திரசேன அவ்விருதினைப் பெற்றுக் கொண்டார்.

வைபவத்தில் சுற்றாடல் ராஜாங்க அமைச்சர்களான சதாசிவம் வியாழேந்திரன்  ஜானக வக்குர  உள்ளிட்ட மத்திய சுற்றாடல் அதிகாரி சபை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

 901 போட்டியாளர்கள் மத்தியிலே 124 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன .

ஆனால் வைத்தியசாலைகள் என்ற வகுதியில் மேற்படி கல்முனை சம்மாந்துறை வைத்திய சாலைகள் மாத்திரமே இந்த வெள்ளி விருதை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours