( வி.ரி. சகாதேவராஜா)


தாய் மொழிக்கு அப்பால் ஆங்கில மொழி அறிவு ஆகில உலகத்தையே ஆளும் வல்லமை பொருந்தியது.

இவ்வாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி , நீர்ப்பாசனம், மோட்டார் வாகன போக்குவரத்து , கட்டிடங்கள் நிருமாணம், வீடமைப்பு, கிராமிய மின் இணைப்பு, நீர் விநியோகம் ஆகிய ஏழு துறைகளுக்கான அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ.கோபாலரத்தினம் தெரிவித்தார்.

காரைதீவு றேடியன்ற் இங்கிலீஷ் அகடெமி நிறுவனத்தின் வருடாந்த பாராட்டு விழா  பணிப்பாளர்களான எந்திரி லயன்.ம.சுதர்சன், திருமதி சங்கீதா சுதர்சன் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடைபெற்றது.

 அச்சமயம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட செயலாளர் கோபாலரெத்தினம் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

விழாவில் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி ஆங்கில பாட விரிவுரையாளர் கலாநிதி என். பிரசாந்தன், உதவிக் கல்விப்  பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, சர்வதே விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி இம்தியாஸ் காரியப்பர், முன்னாள் ஆங்கில பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்ஆர் சண்முகநாதன், எம். எம்.கலீல், அதிபர் கே.புண்ணியநேசன், முன்னாள் உப தவிசாளர் லயன் கே.தட்சணாமூர்த்தி உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தார்கள்..

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் .


கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் உயர் ஆங்கில தேசிய டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்த 252 பேருக்கு ஆங்கில பாட ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது .மேலும் கல்வியில் பட்டம் பெற்ற இன்னொரு தொகையினருக்கு ஆங்கில பாட ஆசிரிய நியமனம் வழங்கப்படவிருக்கிறது. எனவே மாணவர்கள் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அதே வேளை பிற மொழி கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் எமது ஆளுமை விருத்தி அடைவதோடு உலகத்தை தரிசிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. என்றார்.

 மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் மேடை ஏறின. அத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். அதிதிகளுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டன.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours