மணல்சேனை நிருபர்
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருமண் வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் 2013 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்து பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் எஸ்.செல்வம் தலைமையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது
முதல் தடவையாக இப் பாடசாலையில் கணித விஞ்ஞானம் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஐந்து மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இரண்டு மாணவர்கள் கணித பிரிலும் ஒரு மாணவர் விஞ்ஞான பிரிவிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்
மற்றும் வணிகப்பிரிவின் 11 மாணவர்கள் தோற்றி ஏழு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது இதே போல் கலை பிரிவில் கணிசமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குதெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.
இதேவேளை சித்தியடைந்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் பாராட்டுத்தெரிவித்துள்ளதுடன் பெற்றோர்கள் அதிபருக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்
Post A Comment:
0 comments so far,add yours