(எம்.எம்.றம்ஸீன்)
சம்மாந்துறை முஸ்லிம் மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கிடையிலான 3 நாள் கொண்ட சென்றலியன் பீரிமியர் லீக் 5 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி சம்மாந்துறை தேசிய பாடசாலை அதிபர் எம்.டி ஜனூபர் தலைமையில் பழைய மாணவர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் சம்மாந்துறை தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜூனியர் சம்பியன் ,சீனியர் சம்பியன் என இரண்டு வெற்றிக் கிண்ணங்களும் ஜூனியர் சம்பியன் சுற்றுப்போட்டியில் 19 அணிகளும் ,சீனியர் சம்பியன் சுற்றுப்போட்டி 7 அணிகளும் பங்கு பற்றியிருந்தன.
இச் ஜூனியர் சம்பியன் இறுதிச் சுற்றுப்போட்டி 2008 O/L சார்பாக எயிட் ஈகிள் அணியினருக்கும் 2014 O/L சார்பாக போட்டீன் ஈகிள்ஸ் அணியினருக்கும் நடைபெற்றது.
முதலில் 2014 O/L சார்பாக துடுப்பெடுத்தாடிய போட்டீன் ஈகிள்ஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் 2008 O/L சார்பாக எயிட் எய்ட் ஈகிள்ஸ் அணியினருக்கு 50 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய பிரதி கல்வி பணிப்பாளர் பி.பரமதயாளன் கலந்து கொண்டார்.
அக்கரைப்பற்று வலயக் கல்வி பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எல் அப்துல் மஜீட், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எயிட் ஈகிள்ஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 50 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கி கொண்டது.
இத் தொடரில் வெற்றியீட்டிய எயிட் ஈகிள்ஸ் அணிக்கு வெற்றிக்கிண்ணமும் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கமும் வழங்கி வைக்கப்பட்டமை மேலும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours