( வி.ரி.சகாதேவராஜா)

 திருகோணமலை மூதூர் பாரதி மகா வித்தியாலய  பாடசாலை மாணவர்களில் வசதி குறைந்த 50  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள்
இணைந்தகரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வு  பாடசாலையின் அதிபர் பு. ஜெயக்காந்தன் தலைமையில்  நேற்று முன்தினம் இடம்பெற்றது.

 "ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் தொனிப்பொருளில்  இணைந்த கரங்கள் அமைப்பானது   பல கஸ்ரப் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கற்றல் உபகரணங்களை வழங்கிவருகிறது.

 இப் பாடசாலையானது 139 வது பாடசாலையாகவும் இலங்கையில் இனமதம் மொழி பாராமல் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் மேலதிக கல்வி செயற்பாட்டிற்காண நிதி உதவியினை வழங்கி  வருகின்றது.

மேலும் இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி 
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான,
சி.காந்தன், லோ. கஜரூபன், எஸ்.சுரேஸ், மா.ஜெகனாதன் ஆகியோர் 
கலந்து கொண்டனர் .




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours