Benita Vacanze யினால் சர்வதேச surfing expo 2024ம் ஆண்டு போட்டியை இலங்கையில்  நடாத்தவுள்ளமை தொடர்பான விசேட ஊடக சந்திப்பொன்று மட்டக்களப்பு செங்கலடியில்  இடம்பெற்றது.

சர்வதேச அனுபவம்  மற்றும் பெருமைமிக்க இலங்கையர் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தை சுற்றுலாத் துறையின் ஊடாக உயர்த்துவதற்காக Arugambay கடற்கரையில் சர்வதேச surfing Expo கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாக குறித்த ஊடக சந்திப்பின் போது ஜோர்ச் அழகையா (George Newman Alagaiah) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த  surfing expo 2024 போட்டி நிகழ்விற்கு 150 இற்கு மேற்பட்டநாடுகளை  அழைத்துள்ளதாகவும், 

இதில் கிட்டத்தட்ட 50 நாடுகளை சேர்ந் உறுப்பினர்கள்  இந்த நிகழ்வுக்கு  வருவதாக உறுதிப்படுத்தியுள்ளதுடன், அனுசரனையாளர்கள் எம்முடன்  இணைந்து குறித்த  நிகழ்வை  மேலும்  அழகாக்கவுள்ளதாகவும் இந்நிகழ்விற்கு அனைவரையும் அழைத்துள்ளனர்.

இந் நிகழ்வின் முக்கிய நோக்கமாக கடல் சூழல் மற்றும் இயற்கை சூழலை பாதுகாப்பது இலங்கை மட்டுமல்ல உலகம் முழுவதும் surfing விளையாட்டை மிகவும் பிரபலமாக்குவதாகும். கிழக்கு மாகாணத்தில் இளம் தலைமுறையினருக்கு கல்விகற்கவும், போரினால் பாதிக்கபட்ட  விதவைகளுக்கு  கண்ணியமான  வாழ்க்கை  வாழ உதவுவதையும் இலக்காக கொண்ட ஜோர்ஜ் அழகையா அறக்கட்டளை இலங்கை  சுற்றுலாவை மேம்படுத்த நிதி திரட்டுவதற்காகவும் குறித்த கண்காட்சியை நடாத்த திட்டம் தீட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours