(எஸ்.அஷ்ரப்கான்)
அம்பாறை
மாவட்ட 32 முன்னணி விளையாட்டுக்கழகங்கள் மோதிய கலாநிதி யூ.கே. நாபீர்
வெற்றிக்கிண்ண T -10 கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை
ஜீனியஸ் விளையாட்டுக்கழகத்தை ஆறு விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி
சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.
கடந்த
இரு மாதங்களாக நடைபெற்று வந்த கலாநிதி உதுமாங்கண்டு நாபீர் வெற்றிக்கிண்ண T
-10 கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும்,
பரிசளிப்பும் சாய்ந்தமருது தலைவர் அஸ்ரப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில்
வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை
ஜீனியஸ் விளையாட்டுக்கழகம் 10 ஓவர்கள் முடிவில் 09 விக்கட்டுக்களை இழந்து
72 ஓட்டங்களை பெற்றனர். அந்த அணியின் சார்பில் அப்ஹாம் அதிரடியாக
துடுப்பெடுத்தாடி 09 பந்துகளில் அதிகபட்சமாக 24 ஓட்டங்களை குவித்தார்.
பந்துவீச்சில் விளாஸ்டர் அணியின் பவாஸ் இரண்டு ஓவர்கள் பந்துவீசி 03
விக்கட்டுகளை வீழ்த்தினார்.
73
எனும் வெற்றியிலைக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளாஸ்டர்
விளையாட்டுக்கழகம் 8.5 பந்து வீச்சு ஓவர்களை எதிர்கொண்டு 04 விக்கட்டுக்களை
மட்டுமே இழந்து வெற்றியிலைக்கை அடைந்தது. சாய்ந்தமருது பிளாஸ்டர்
விளையாட்டுக்கழகம் சார்பில் ஆபாக், ஷஹீன் ஆகியோர் சிறப்பாக
துடுப்பெடுத்தாடியிருந்தனர். போட்டியின் நாயகனாக ஏ.என்.எம். ஆபாக் மற்றும்
தொடரின் நாயகனாக இரண்டு சதமுட்பட குறைந்த பந்துகளில் அதிக ஓட்டங்களை
குவித்த அஸாருதீன் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
சாய்ந்தமருது
பிளாஸ்டர் விளையாட்டுக்கழக தலைவர் எம்.பி.எம். பாஜில் நெறிப்படுத்தலில்
கழக தவிசாளர் ஏ.எம்.ஏ. நிசார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
பிரதான அனுசரணை வழங்கியிருந்த நாபீர் பௌண்டஷன் தலைவரும், ஈ.சி.எம். நிறுவன
பிரதானியுமான (கலாநிதி) பொறியியலாளர் யூ.கே. நாபீர் பிரதம அதிதியாக கலந்து
கொண்டிருந்ததுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் எம்.ஐ.எம்.
றியாஸ், கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம்.ஐ. ரைஸுல் ஹாதி, கிழக்கு
மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா உமர்,
சாய்ந்தமருது பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். சபூர்தீன்,
சாய்ந்தமருது அனைத்துப் பொதுநிறுவனங்கள் சம்மேளன தலைவர் ஏ.எல்.எம். பரீட்,
அல்- ஜலால் வித்தியாலய பிரதியதிபர் ரீ.கே.எம். சிராஜ், சம்மாந்துறை
வலயக்கல்வி பணிமனை திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.எம்.எம்.
முனாஸ், தொழிலதிபர் இஃரா யூ.எல். சத்தார் உட்பட சாய்ந்தமருது கிரிக்கட்
சங்க நிர்வாகிகள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours