துறைநீலாவணை லயன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 24 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் கிறிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் திகதி  கழகத் தலைவர் அ.துசாந் தலைமையில் இடம்பெற்றது.

இப்போட்டியானது கடந்த இரு வாரங்களாக நடைபெற்றதுடன் அம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களைச்சேர்ந்த 32 கழகங்கள் பங்குபற்றி இருந்ததுடன் இறுதிப் போட்டிக்கு அக்கரைப்பற்று ஜங் புளோவர் விளையாட்டுக்  கழகத்திற்கும், களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்திற்கும், இடையில் நடைபெற்றதில் களுதாவளை கெனடி விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டு வெற்றிக்கிண்ணத்தினை சுபீகரித்துக்கொண்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், சிறப்பதிதிகளாக ஊடகவியலாளர் சா.நடனசபேசன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் த.வினாயகமூர்த்தி, வடிவேல் மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.




















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours