(  வி.ரி. சகாதேவராஜா)

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள காயத்திரி கிராம மக்களுக்கான 25 வீடுகளை நிர்மாணிப்பதற்காக  அடிக்கல் நாட்டும் நிகழ்வு  திருக்கோவில் பிரதேச செயலாளர் 
தங்கையா கஜேந்திரன்  தலைமையில்  நேற்று(19) சனிக்கிழமை காயத்திரி கிராமத்தில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் கலந்து சிறப்பித்தார்.

இவ் வீடுகள்   திருக்கோவில் பிரதேச செயலாளர்
 த .கஜேந்திரனின் வேண்டுகோளுக்கு அமைவாக   மொறட்டுவ பல்கலைக்கழகத்தில்  1989/1990 காலப்பகுதியில் கல்வி கற்று தற்போது கனடாவில் வசித்துவரும் நிதி வழங்குனர்கள் இணைந்து Seeders Canada அமைப்பினர் திருக்கோவில் -4  காயத்திரி கிராமத்தில் உள்ள வீடற்ற 25 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட தீர்மானிக்கபட்டிருந்தது.

 .இதில் தற்போது 10 வீடுகள் பூரணமாக கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில்   அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  சிவ. ஜெகராஜன் Seeders Canada அமைப்பின் தலைவர் இளங்குமரன் WE CAN மற்றும் மன்னார் மாவட்ட மாற்று திறனாளிகள் அமைப்பின் இணைத்தலைவர் பி.றோபட் திருக்கோவில் பிரதேச  உதவி செயலாளர்
திருமதி.எஸ்.நிருபா ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.அனோஜா உஷாந்த் , கிராம நிருவாக உத்தியோத்தர் என்.கந்தசாமி ,வீட்டுத்திட்ட இணைப்பாளர் எஸ்.நந்தகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.


இவ் வீடுகள் அமைப்பதற்காக பிரதேச செயலகத்தால் காணிகளும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து 
இவ்வாறு அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகளில்  முதற்கட்டமாக 05 வீடுகள்  2023.07.09  அன்றும் இரண்டாம் கட்ட 05 வீடுகள் 2023.12.21  அன்றும் பூரணமாக கட்டிமுடிக்கப்பட்டு மிகவும் சிறப்பானமுறையில் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  மூன்றாம் கட்டமாக  கட்டமாக 03 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அவ் வீடுகளுக்கான அடிக்கல்  நாட்டி கடந்தமாதம்  (2024 .05.08) ஆரம்பித்தது வைக்கப்பட்டது. இவ்வாறு 2024.05.08 ஆரம்பித்தது வைக்கப்பட்ட வீடுகள் நேற்றைய தினம் முற்றுமுழுதாக முடிக்கபட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

இம்மூன்று வீடுகளுக்கான நிதியினை Seeders Canada அமைப்பினரின் ஏற்பாட்டிற்கமைவாக அன்பு நெறி அமைப்பினர் வழங்கியிருந்தனர்.

திருக்கோவில்--4 கிராம உத்தியோகத்தர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் வீட்டுதிட்ட அமைப்பினர்களான திருமதி.லோ.லோஜிதா,ஆறுமுகம்.பொ.கேதீஸ்வரன் , கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பயனாளர்கள்  எனப் பலரும் கலந்துகொண்டார்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours