(எஸ்.அஷ்ரப்கான்)
அரசு,
ஜூன் 26 தொடுத்த மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து நாடு தழுவிய ரீதியில்
பாடசாலை முன்பாக அதிபர் ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
இப்போராட்டம்
இன்று (02) பாடசாலை நிறைவடைந்த வேளையில் 2 மணிக்கு பின்னர் இடம்பெற்ற
இப்போராட்டம் இலங்கையில் உள்ள சகல பாடசாலைகள் முன்பாகவும் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தை இணைந்த அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
ஒலுவில்
அல்-ஹம்றா மகா வித்தியாலயம் முன்பாக ஆசிரியர்களின் போராட்டம்
இடம்பெற்றது. இதில், சாதாரண வேண்டுதலுக்கு தீர்வு கொடு ! , ரணில்
விக்கிரமசிங்கவின் ஒடுக்குமுறை அறிக்கைக்கு எதிராக போராடுவோம் ! என
பல்வேறு சுலோகங்களை ஏந்தி அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
Post A Comment:
0 comments so far,add yours