எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வசதி குறைந்த தேவையுடைய மாணவர்கள் சுமார் 3746 பேருக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கிவைக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 வலயக் கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 1 தொடக்கம் 11 வரை கல்வி பயிலும் சுமார் 3446 வசதிகுறைந்த மாணவர்களுக்கும், க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் சுமார் 300 மாணவ மாணவிகளுக்குமான ஜனாதிபதி புலமைப் பரிசில் எதிர்வரும் 16ம் திகதி வழங்கி வைக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு தொடர்பான முன்னாயத்த விடயங்களை ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜெஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று (07) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார், மேலதி அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், பிரதம கணக்காளர் எஸ்.எம். பசீர், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் இப்புலமைப் பரிசில் திட்டத்தின்கீழ் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு மாதாந்தம் தலா 6 ஆயிரம் ரூபா வீதம் 24 மாதங்களுக்கம், 1 தொடக்கம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களுகு;கு மாதாந்தம் 3000 ரூபா வீதம் 12 மாதங்களுக்குமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours