( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை
சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த பிரபல கவிஞர் வைரமுத்து கணேசன் எழுதிய
"திருஞானசம்பந்தர் வாழ்க்கை வரலாறு" நூல் வெளியீட்டு விழா இன்று (30)
ஞாயிற்றுக்கிழமை உகந்தமலை முருகன் ஆலயத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது .
காரைதீவு
பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய
தலைவருமான கலாநிதி கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது .
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் நெத்மினி கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வீ.ரி. சகாதேவராஜா , திருமலை ஆசிரியை திருமதி கி.
குமுதினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள் .
Post A Comment:
0 comments so far,add yours