கமலி
பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட செல்வாபுரம் செந்நெறி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் கா.பகிரதன் தலைமையில் 03.07.2024 நடைபெற்றது.பாடசாலை
வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற இவ் விளையாட்டு போட்டியில் பிரதம
அதிதியாக ப பு.திவிதரன் பிரதிக் கல்வி பணிப்பாளர் பட்டிருப்பு கல்வி வலயம்
அவர்களும்,விசேட அதிதிகளாக போரதீவுக் கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள்,
மற்றும் உடற் கல்விக்கு பொறுப்பான வளவாளர்கள், பாடசாலை அபிவிருத்தி
சங்கத்தினர்,பழைய மாணவர் சங்கத்தினர்,கிராம ஆலயங்களி நிர்வாகத்தினர் என
பலபோர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
நிகழ்வின் போது விசேடமாக மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, பழைய
மாணவர்களுக்கான அஞ்சலோட்டம், ஆசிரியர்களுக்கான நிகழ்சி என்பன மிகச்
சிறப்பாக அமைந்திருந்தது.
மருதம் இல்லம் , முல்லை
இல்லம் என இரண்டு இல்லங்களாக பிரித்து நடை பெற்ற குறித்த விளையாட்டுப்
போட்டியில் மாணவர்களுக்கான அனைத்து விளையாட்டுக்களின் அடிப்படையில் 854
புள்ளிகளைப் பெற்று மருதம் இல்லம் முதலாமிடத்தையும் 820 புள்ளிகளைப் பெற்று
முல்லை இல்லம் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது. இவர்களுக்கான
வெற்றிக்கிண்ணத்தை விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட
பிரதிக் கல்விப் பணிப்பாளர் பு.திவிதரன் வழங்கி வைத்தார்....
.
.
Post A Comment:
0 comments so far,add yours