அம்பாறை
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ .டி.வீரசிங்கவின் பன்முகப்
படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டின் கீழ் திருக்கோவில் பிரதேச
செயலகத்தின் கீழ் 24 செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது .
அதற்கான
பொருட்கள் மற்றும் காசோலைகள் வழங்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக
கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நேற்று
முன்தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
விஷேட அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராளுமன்ற
உறுப்பினர் டி. வீரசிங்கவின் அழைப்பின் பெயரில் வருகைதந்தார்.
பாராளுமன்ற
உறுப்பினர் வீரசிங்க திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்
திருமதி.எஸ்.நிருபா பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.அனோஜா
உசாந்த் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் அம்பாறை மாவட்ட
இணைப்பாளர் யோகராஜா சந்துரு மற்றும் பாரளுமன்ற உறுப்பினரின் மற்றும்
ஆளுநரின் இணைப்பாளர்கள் கலந்து இவ் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து
வைத்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours