(எஸ்.அஷ்ரப்கான்)
ஜென்டிங் இன்டர்நேஷனல் அபாகஸ் போட்டி மலேசியாவின் ஜென்டிங் நேஷனல் கன்வென்ஷன் ஹாலில் 07.07.2024 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.
இதில்
மலேசியா கல்வி அமைச்சின் விளையாட்டு, பாடத்திட்டம் மற்றும் கலைப் பிரிவின்
உதவி இயக்குநர் டாக்டர் முஹம்மட் அஸ்லி பின் ஜகாரியா அவர்கள் கலந்து
கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் இலங்கையின் ஏக பிரதிநிதிகளான (ICAM ABACUS GROUP) ஐகெம் அபாகஸ் குழு - 90 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில்
12 முதல் இடங்கள், 15 இரண்டாம் இடங்கள், 18 மூன்றாம் இடங்கள், 20 ஆறுதல்
பரிசுகள் மற்றும் 25 பங்கேற்பு விருதுகளைப் பெற்று, சர்வதேச தரத்தில்
ஐகெம் அபாகஸ் மாணவர்கள் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கல்முனை
மரியா தெரசியா சர்வதேச கல்லூரியைச் சேர்ந்த றிஸ்வான் பாத்திமா (வயது -
06) அறக்கட்டளை ஜூனியர் லெவல் இரண்டாவது இடம், சாய்ந்தமருது அல்-ஹிலால்
வித்தியாலயத்தைச் சேர்ந்த முஹம்மட் நாஸர் முஹம்மட் நப்தால்,
(வயது - 07) ஜூனியர் லெவல் இரண்டாவது இடம், கல்முனை ஸாகிரா தேசிய பாடசாலையைச் சேர்ந்த நெளஸாட் முஹம்மட் ஸிமாம்
(வயது- 10) லெவல் - 01 இரண்டாம் இடம்,
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையைச் சேர்ந்த
ஜெளபர் பாத்திமா ரொஸானி (வயது- 12) லெவல் - 01 இரண்டாம் இடம், ஆகிய மாணவர்களே இவ்வாறு தெரிவு செய்யப்
Post A Comment:
0 comments so far,add yours